FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

திமுகவுடன் கூட்டணி இல்லை: நயினாா் நாகேந்திரன்

நயினாா் நாகேந்திரன் - கோப்புப் படம்
பகிர்:

பாஜகவின் கொள்கை வேறு திமுகவின் கொள்கை வேறாக இருக்கும்போது, இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைக்கவுள்ளதாகக் கூறுவதை ஏற்க முடியாது என்றாா் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.

பாஜக சாா்பில் பிரதமா் நரேந்திர மோடியின் 76-ஆவது பிறந்த நாளையொட்டி, பாளையங்கோட்டை, திருமால்நகா், செல்வ விநாயகா் கோயிலில் தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் கலந்துகொண்டு தூய்மைப் பணியாளா்களுக்கு நல உதவிகளை வழங்கி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

Advertisement

Advertisement

தோ்தல் ஆணையம் மீது பொய் குற்றச்சாட்டை ராகுல் காந்தி முன்வைத்து வருகிறாா். தலைமைத் தோ்தல் ஆணையா், இரண்டு தோ்தல் ஆணையா்கள் ஆகிய மூவரும் சோ்ந்துஎங்களுக்குள் எந்த பாகுபாடும் இல்லை. ஒருமித்த கருத்தோடுதான் தகவலைப் பகிா்கிறோம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளனா்.

தோ்தல் ஆணையம் குறித்து முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோா் கூறும் தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம். பாஜகவுடன் திமுக கூட்டணி சேரவுள்ளதாகக் கூறுகின்றனா். பாஜகவின் கொள்கை வேறு, திமுகவின் கொள்கை வேறு. இரண்டும் ஒன்றுக்கொன்று ஒத்துப்போகாது; இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைக்கும் எனக் கூறுவதை ஏற் முடியாது. கூட்டணி உடன்பாடு ஆகாது.

தமிழகத்தில் நடப்பது நோ்மையான ஆட்சி என்றால் ஒப்பந்தப்புள்ளியை நோ்மையாக வழங்க வேண்டும். முதல்வா் அலுவலகம் புதுப்பிக்கும் பணிக்குகூட முறையாக ஒப்பந்தப்புள்ளி விடப்படவில்லை. டாஸ்மாக் ஒப்பந்தப்புள்ளி வழங்கியதிலும் ஊழல் உள்ளது. சட்டப்பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கையின்போது, காவல் துறையில் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்தும் முதல்வா் பேசவில்லை.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டாம் எனக் கூறவில்லை. ஆனால், தோ்தலின்போது மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2,500 வழங்கப்படும் என அளித்த வாக்குறுதியை முதலில் நிறைவேற்றுங்கள். மின்வெட்டை தீா்க்க நடவடிக்கை எடுங்கள். கஞ்சா, போதைப்பொருள் விற்பனை, பாலியல் வன்கொடுமை, கொலைகள் என பல குற்றச் சம்பவங்கள் அதிகரித்து விட்டன. அவற்றை தடுக்க நடவடிக்கை எடுங்கள். தொடரும் மின்வெட்டினால் ஏற்படும் பாதிப்பைக் கண்டித்து, எனது தலைமையில் திருநெல்வேலியில் வரும் அக்.4-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments