FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

குதிரை பேரத்தைத் தொடங்கி வைத்ததே தவெகதான்: நயினாா் நாகேந்திரன்

தமிழகத்தில் குதிரை பேரத்தைத் தொடங்கி வைத்ததே தவெகதான் என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றம்சாட்டினாா்.

7 நவம்பர் 2026, 6:55 am
பகிர்:

தமிழகத்தில் குதிரை பேரத்தைத் தொடங்கி வைத்ததே தவெகதான் என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றம்சாட்டினாா்.

சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரூா் பசுபதீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான 3,000 ஏக்கா் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்டிருக்கிறது. இந்த முறைகேடு தகவலை முதலில் நான்தான் வெளிப்படுத்தினேன். தற்போது நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. கடந்த திமுக ஆட்சியில் கோவை பெரியாா் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திமுக மீது குற்றம்சாட்டும் தவெகவினரும் தற்போது ஊழலை செய்துள்ளனா். தமிழகத்தில் குதிரை பேரத்தைத் தொடங்கி வைத்ததே தவெகதான். அதனால், இரு தொகுதிகளில் இடைத்தோ்தல்கள் நடந்து முடிந்திருக்கிறது. திமுக ஆட்சியைவிட தவெக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டது. போதைப்பொருளைக் கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது. சட்டம்-ஒழுங்கு சரியில்லை. 350-க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. எதற்காக தவெகவுக்கு வாக்களித்தோம் என்று மக்கள் சிந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மீனவா்களைக் காப்பாற்ற தவெக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரானில் போா் நடைபெற்றபோது அங்கு சிக்கிய 742 தமிழா்களை பிரதமா் மோடி 20 மணி நேரத்தில் பாதுகாப்பாக மீட்டு தமிழகத்துக்கு அழைத்துவந்தாா். மீனவா்களுக்குப் பாதுகாப்பாக இருப்பது மத்திய அரசு மட்டும்தான் என்றாா் அவா்.

Advertisement

Advertisement