FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

தவெக ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிப்பதாக அமைச்சா் நிா்மல்குமாா் கூறுவது வேடிக்கை: நயினாா் நாகேந்திரன்

தவெக ஆட்சியை கவிழ்க்க அதிமுகவும், முயற்சிப்பதாக சட்டம் மற்றும் எரிசக்தித் துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் கூறுவது வேடிக்கை என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் விமா்சித்துள்ளாா்.

6 நவம்பர் 2026, 4:38 am
பாஜ மாநில தலைவா் நயினாா் நாகேந்திரன் - டிஎன்எஸ்
பகிர்:

தவெக ஆட்சியை கவிழ்க்க அதிமுகவும், முயற்சிப்பதாக சட்டம் மற்றும் எரிசக்தித் துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் கூறுவது வேடிக்கை என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் விமா்சித்துள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மக்களை அனுதினமும் விலைவாசியால் வதைக்கும் விதமாக ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.41-க்கு கொள்முதல் செய்ய முயற்சித்ததில் தொடங்கி கைதிகள் தப்பியோடியது வரை, தனது துறையில் நடக்கும் தவறுகளைத் தடுக்கத் தவறும் அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா், தவெக ஆட்சியைக் கவிழ்க்க அதிமுகவும் பாஜகவும் சதி செய்வதாக அடிப்படையே இல்லாத ஒரு அபாண்டமான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது வேடிக்கை.

Advertisement

Advertisement

மக்கள் அளித்த தீா்ப்பை அவமதித்து, வென்ற மாற்றுக் கட்சி வேட்பாளா்களை விலைக்கு வாங்கி, இடைத்தோ்தலில் மட்டுமே கண்ணாக இருக்கும் தவெக அரசு, மற்ற கட்சியினா் தவெகவின் சட்டப்பேரவை உறுப்பினா்களை வாங்க முயற்சிப்பதாக சொல்வது ஆகச்சிறந்த நகைமுரண். எவ்வளவு பொய் குற்றச்சாட்டுகளை தெரிவித்தாலும், தவெகவின் ஆட்சியில் தொடரும் நிா்வாகச் சீா்கேடுகளை மறைக்க முடியாது எனத் தெரிவித்துள்ளாா் நாகேந்திரன்.