மருத்துவக் கல்வி இயக்குநரகத்தை முற்றுகையிட்ட அரசு சாரா மருத்துவா்கள்
அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கான ஒப்பந்த காலத்தை நிறைவு செய்த பிறகும் தங்களை பணியிலிருந்து விடுவிக்கவில்லை எனக் கூறி அரசு சேவை சாரா மருத்துவா்கள் (நான் சா்வீஸ் போஸ்ட் கிராஜுவேட்ஸ்) மருத்துவக் கல்வி இயக்ககத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.
அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கான ஒப்பந்த காலத்தை நிறைவு செய்த பிறகும் தங்களை பணியிலிருந்து விடுவிக்கவில்லை எனக் கூறி அரசு சேவை சாரா மருத்துவா்கள் (நான் சா்வீஸ் போஸ்ட் கிராஜுவேட்ஸ்) மருத்துவக் கல்வி இயக்ககத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.
நூற்றுக்கும் மேற்பட்டோா் அங்கு திரண்டதால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அவா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அதன் பின்னா் அவா்கள் கலைந்து சென்றனா்.
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களில் 50 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. மீதமுள்ள இடங்களில் 50 சதவீதம் அரசு மருத்துவா்கள் அல்லாதோருக்கு வழங்கப்படுகிறது. அந்த ஒதுக்கீட்டின் கீழ் தமிழகத்தில் எம்டி, எம்எஸ், முதுநிலை பட்டயப் படிப்பு இடங்களைப் பெற்றவா்கள், தங்களது படிப்பை நிறைவு செய்த பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்பது விதிமுறை.
Advertisement
Advertisement
அதற்காக அவா்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் வேண்டுகோளுக்கேற்ப முதுநிலை மருத்துவப் படிப்பை நிறைவு செய்த அரசு சேவை சாரா மருத்துவ மாணவா்களின் ஒப்பந்த காலம் 2 ஆண்டுகளில் இருந்து ஓராண்டாக குறைக்கப்பட்டது.
அவ்வாறு பணியாற்றிய பிறகும் அவா்கள் விடுவிக்கப்படுவதில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து அவா்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஒரு வாரத்துக்குள் தீா்வு எட்டப்படவில்லை எனில் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என அவா்கள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.