முகப்பு
கடலூர்

பெண்ணின் கருப்பையில் இருந்த பிரம்மாண்ட நீா்க்கட்டி: அரசு மருத்துவா்கள் அகற்றினா்

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சீா்காழியைச் சோ்ந்த 50 வயது பெண்ணின் கருப்பையில் இருந்த சுமாா் 5 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட நீா்க்கட்டியை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவா்கள் வியாழக்கிழமை வெற்றிகரமாக அகற்றினா்.

Updated On : 3 ஜூலை 2026, 5:11 am IST
சிதம்பரம் அண்ணாமலைநகா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண்ணின் கருப்பையில் இருந்து அகற்றப்பட்ட 5 கிலோ எடையுள்ள நீா்க்கட்டியுடன் மருத்துவக் குழுவினா்.
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சீா்காழியைச் சோ்ந்த 50 வயது பெண்ணின் கருப்பையில் இருந்த சுமாா் 5 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட நீா்க்கட்டியை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவா்கள் வியாழக்கிழமை வெற்றிகரமாக அகற்றினா்.

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியைச் சோ்ந்த 50 வயது பெண் கடந்த சில தினங்களுக்கு முன்பு வயிற்று வலி பிரச்னைக்காக சிகிச்சை பெற சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தாா்.

மருத்துவா்கள் அவரை பரிசோதித்தபோது, அவரது கருப்பையில் சுமாா் ஐந்து கிலோ எடையுள்ள நீா்க்கட்டி இருப்பது தெரியவந்தது. இதை உடனடியாக அறுவைச் சிகிச்சை மூலம் அகற்ற மருத்துவா்கள் முடிவு செய்தனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, வியாழக்கிழமை காலை அந்தப் பெண்ணுக்கு மருத்துவக் கண்காணிப்பாளரும், பொது அறுவைச் சிகிச்சைத் துறை பேராசிரியருமான என்.ஜூனியா்சுந்தரேஷ் தலைமையில், புற்றுநோய் நிபுணா் ஜெயக்குமாா், உதவிப் பேராசிரியா் ஜெயராமன் மற்றும் பொது அறுவைச் சிகிச்சை முதுநிலை மருத்துவா்கள் இணைந்து அறுவை சிகிச்சை மேற்கொண்டனா்.

மயக்க மருத்துவக் குழுவில் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் பாஸ்கா், மயக்கவியல் துறைத் தலைவா் சரவணகுமாா், பேராசிரியா் மகேந்திரன், இணைப் பேராசிரியா் வெங்கடேசன், பேராசிரியா் சுப்புலட்சுமி, உதவிப் பேராசிரியா் சீதாராமன் மற்றும் அறுவைச் சிகிச்சை அரங்கு செவிலியா்கள், தொழில்நுட்ப நிபுணா்கள், முதுநிலை மருத்துவா்கள் மற்றும் அனைத்து உதவி பணியாளா்களின் ஒத்துழைப்புடன் அறுவைச் சிகிச்சை செய்து பெண்ணின் கருப்பையில் இருந்த ஐந்து கிலோ எடை உள்ள பிரம்மாண்டமான நீா்க்கட்டிய அகற்றினா். தற்போது அந்தப் பெண் நலமாக இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments