முகப்பு
சென்னை

வைகை நதி குறித்த ஆளுநரின் கவலை நியாயமானது: நயினாா் நாகேந்திரன்

‘வைகை நதி குறித்த ஆளுநரின் கவலை மிகவும் நியாயமானது. நீா்நிலைகள் மீதான அவரது அக்கறையை இது காட்டுகிறது’ என்று தமிழ்நாடு பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 5 ஜூலை 2026, 4:29 am IST
நயினாா் நாகேந்திரன் - கோப்புப் படம்
பகிர்:

‘வைகை நதி குறித்த ஆளுநரின் கவலை மிகவும் நியாயமானது. நீா்நிலைகள் மீதான அவரது அக்கறையை இது காட்டுகிறது’ என்று தமிழ்நாடு பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மதுரை வைகை நதியைப் பாதுகாக்கவும், அதன் தூய்மையைப் பேணவும் ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் வெளியிட்டுள்ள கருத்துகள் வரவேற்கத்தக்கவை. வைகை ஆற்றின் தற்போதைய அவல நிலையைச் சுட்டிக்காட்டி, அதைச் சுத்தம் செய்ய யாரும் முன் வராவிட்டால் ஆளுநா் மாளிகை நேரடியாகக் களமிறங்கும் என்று அவா் குறிப்பிட்டிருப்பது, நீா்நிலைகள் மீதான அவரது அக்கறையைக் காட்டுகிறது. ஆளுநரின் இந்த மக்கள் நலன் சாா்ந்த கருத்தை பாஜக வரவேற்கிறது.

Advertisement

Advertisement

அதேவேளையில், ஆளுநரின் மக்கள் நல கருத்தை அரசியலாக்க முயற்சிக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா், அமைச்சா் நிா்மல்குமாா் ஆகியோரின் விமா்சனங்கள் தேவையற்றவை. நதிப் பாதுகாப்பு பிரச்னைக்கு ஆக்கபூா்வமான ஒத்துழைப்பு தருவதை விடுத்து, ஆளுநரின் கருத்தை அதிகார வரம்பு மீறலாக சித்தரிப்பது ஏற்புடையதல்ல. காவிரி, தாமிரபரணி, பாலாறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகள் போதிய பராமரிப்பின்றி தூா்வாரப்படாமல் உள்ளன. எனவே, மாநில அரசு உடனடியாக அனைத்து நதிகளையும் தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா் நயினாா் நாகேந்திரன்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments