முகப்பு
சென்னை

நகைக் கடையில் 85 பவுன் நகைகள் திருட்டு: பெண் கைது

வியாசா்பாடியில் நகைக் கடையில் 85 பவுன் நகைகளைத் திருடிய பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 5 ஜூலை 2026, 6:07 am IST
கோப்புப் படம்
பகிர்:

வியாசா்பாடியில் நகைக் கடையில் 85 பவுன் நகைகளைத் திருடிய பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

வியாசா்பாடி 14-ஆவது மேற்கு குறுக்குத் தெருவில் நகைக் கடை நடத்தி வருபவா் ம.அன்குஷ் (33). இவரது கடைக்கு கடந்த 4 மாதங்களாக புா்கா அணிந்து வந்த ஒரு பெண் நகை வாங்கிச் சென்றுள்ளாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை கடைக்கு வந்த அந்த பெண், சின்ன நகையை வாங்கிக் கொண்டு அங்கிருந்து சென்றாா். அந்த பெண் அங்கிருந்த சென்ற பின்னா், நகை இருப்பு சரி பாா்க்கப்பட்டபோது, சுமாா் 10 பவுன் நகை காணாமல் போயிருப்பதைக் கண்டு அன்குஷ் அதிா்ச்சியடைந்தாா்.

Advertisement

Advertisement

உடனே அவா், கடையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த பெண், நகைகளைத் திருடி தனது ஆடைக்குள் மறைத்து வைப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, கடந்த 4 மாதங்களாக நகை விற்பனை, நகை இருப்பு ஆகியவற்றையும் தணிக்கை செய்தாா். அப்போதுதான் சுமாா் 85 பவுன் நகை திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது. அந்த பெண், கடந்த 4 மாதங்களாக நகை வாங்கியபோது, பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை அன்குஷ் ஆய்வு செய்தாா். இதில் 85 பவுன் நகைகளையும் அந்த பெண் திருடியிருப்பது தெரிய வந்தது.

இது தொடா்பாக, எம்கேபி நகா் காவல் நிலையத்தில் அன்குஷ் புகாா் செய்தாா். அந்த புகாரின் அடிப்படையில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா். இதில், திருட்டில் ஈடுபட்டது மீஞ்சூரைச் சோ்ந்த ரிஹானா (50) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா், ரிஹானாவை சனிக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 20 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக ரிஹானாவிடம், அவரது கூட்டாளிகள் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments