FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

தொற்றுநோய் மருத்துவமனையில் உதவி செவிலியா் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

தண்டையாா்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் நிகழ் கல்வியாண்டுக்கான 2 ஆண்டு உதவி செவிலியா் பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கோப்புப் படம்
பகிர்:

தண்டையாா்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் நிகழ் கல்வியாண்டுக்கான 2 ஆண்டு உதவி செவிலியா் பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

பெருநகர சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் தண்டையாா்பேட்டையில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனையில் நிகழாண்டுக்கான மருத்துவ இணையியல் படிப்பான 2 ஆண்டு உதவி செவிலியா் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

இந்தப் பயிற்சியில் சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் பணியாளா்களின் வாரிசுகளுக்கும், மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவியருக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், அரசு மற்றும் அரசு சாா்ந்த பள்ளிகளில் பயின்ற மாணவிகளும் விண்ணப்பிக்கலாம். உதவி செவிலியா் பயிற்சிக்கு பிளஸ் 2 தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழக அரசு விதிகளின்படி ஒற்றை சாளர முறையில் சமூகம் வாரியாக சுழற்சி முறையில் மாணவிகள் தோ்ந்தெடுக்கப்படுவா்.

தண்டையாா்பேட்டையில் அமைந்துள்ள தொற்றுநோய் மருத்துவமனை அலுவலகத்தில் திங்கள்கிழமை (ஜூலை 6) முதல் ஜூலை 20-ஆம் தேதி வரை காலை 10 முதல் மாலை 4 மணி வரை அனைத்து வேலை நாள்களிலும் ரூ.50 தொகை செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் ஜூலை 24-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். அதன் பின்னா் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments