தடைசெய்யப்பட்ட நெகிழிகள்: ரூ.14.30 லட்சம் அபராதம்
சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 638 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழிகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், ரூ.14.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 638 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழிகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், ரூ.14.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
இது குறித்து சென்னை மாநகராட்சி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் நெகிழித் தாள் உறை, உணவு அருந்தும் மேசையின் மீது விரிக்கப்படும் நெகிழித் தாள் உள்ளிட்ட 28 வகையாான நெகிழிப் பொருள்கள் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.
இவ்வகையான நெகிழிப் பொருள்களுக்கு பதிலாக வாழை இலை, பாக்குமர இலை, அலுமினியத் தாள், காகித சுருள், தாமரை இலை உள்ளிட்ட 12 வகையான பொருள்களைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஜூன் 1 முதல் 30-ஆம் தேதி வரை 11,127 வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில் 638 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், ரூ.14,30,300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதில், அதிகபட்சமாக பெருங்குடி மண்டலத்தில் ரூ.2.18 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கோடம்பாக்கத்தில் ரூ.1.80 லட்சம், அடையாற்றில் ரூ.1.69 லட்சம், அண்ணா நகரில் ரூ.1.41 லட்சமும் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக திருவொற்றியூரில் ரூ.8,700-மும், மணலியில் ரூ.9,100-மும் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.