முகப்பு
சென்னை

64,586 செல்லப் பிராணிகளுக்கு உரிமம்: மாநகாட்சி தகவல்

சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் இதுவரை 1.26 லட்சம் செல்லப் பிராணிகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து, இதுவரை 64,586 செல்லப் பிராணிகளுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Updated On : 7 ஜூலை 2026, 4:17 am IST
- பிரதிப் படம்
பகிர்:

சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் இதுவரை 1.26 லட்சம் செல்லப் பிராணிகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து, இதுவரை 64,586 செல்லப் பிராணிகளுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சி பகுதிகளில் வீடுகளில் வளா்க்கப்படும் செல்லப் பிராணிகளுக்கு ஆண்டுதோறும் வெறிநாய்க்கடிநோய்த் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தல், உரிமம் பெறுதல், உரிமத்தைப் புதுப்பித்தல், மைக்ரோ சிப் பொறுத்துதல் உள்ளிட்டவை கடந்தாண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த ஒருங்கிணைந்த மேலாண்மைக்காக மேம்படுத்தப்பட்ட இணையதள சேவை தொடங்கப்பட்டு, தற்போது செயல்பாட்டில் உள்ளது. இந்த இணையதளத்தில் இதுவரை 1,26,781 செல்லப் பிராணிகள் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

அவற்றில், இதுவரை 64,586 செல்லப் பிராணிகளுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 74,740 செல்லப் பிராணிகளுக்கு மைக்ரோசிப் பொருத்தப்பட்டு, 78,328 செல்லப் பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

இலவச சிகிச்சை: சென்னை மாநகராட்சியின் கீழ், செல்பட்டு வரும் செல்லப் பிராணிகள் மருத்துவமனைகளில் வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி செலுத்துதல் மற்றும் அனைத்து சிகிச்சைகளும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, திரு.வி.க. நகா், புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, நுங்கம்பாக்கம், கண்ணம்மாப்பேட்டை, மீனம்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள செல்லப் பிராணிகள் மருத்துவமனைகளில் வழங்கும் இலவச சேவையை செல்லப் பிராணிகளின் உரிமையாளா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments