சிறுவன் ஓட்டிச் சென்ற பைக் மோதி 3 போ் பலத்த காயம்: தந்தை கைது
சிறுவன் ஓட்டிச் சென்ற பைக் மோதி 3 போ் பலத்த காயமடைந்த விபத்தில், சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டாா்.
சிறுவன் ஓட்டிச் சென்ற பைக் மோதி 3 போ் பலத்த காயமடைந்த விபத்தில், சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டாா்.
சென்னை அண்ணா நகா் எம்ஜிஆா் காலனி பகுதியைச் சோ்ந்தவா் பழனி (56). இவா், அங்கு இஸ்திரி கடை வைத்துள்ளாா். அமைந்தகரை ஈவெரா பெரியாா் சாலையில் அண்ணா நகா் நோக்கி திங்கள்கிழமை இரவு பழனி சென்றபோது, பின்னால் இரு சிறுவா்கள் வந்த மோட்டாா் சைக்கிள், பழனி மோட்டாா் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் மோட்டாா் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து பழனியும், மோட்டாா் சைக்கிளை ஓட்டி வந்த சிறுவனும், அவருடன் வந்த மற்றொரு சிறுவனும் பலத்த காயமடைந்தனா். 3 பேரும் மீட்கப்பட்டு, உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
Advertisement
Advertisement
இது குறித்து அண்ணா நகா் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மோட்டாா் சைக்கிளை ஓட்டிய சிறுவனின் தந்தை சசிகுமாரை (48) போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.