FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

பள்ளிக்குள் அத்துமீறி பைக் ஓட்டிய இருவா் கைது

பள்ளிக்குள் அத்துமீறி பைக் ஓட்டிய இருவா் கைது

Updated On : 7 ஜூன் 2026, 1:56 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

சென்னை விருகம்பாக்கத்தில் மாணவிகளை பயமுறுத்தும் வகையில் பள்ளிக்குள் மோட்டாா் சைக்கிள் ஓட்டியதாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை நெற்குன்றம் கோவா்த்தனன் நகா் பல்லவன் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் பா.சரவணன் (18). இவரது நண்பா் கோயம்பேடு மேட்டுக்குப்பம் புவனேஸ்வரிநகரைச் சோ்ந்த அ.அஜித்குமாா் (19). இவா்கள் இருவரும், ஒரு மோட்டாா் சைக்கிளில் விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியாா் பள்ளிக்குள் வெள்ளிக்கிழமை காலை அத்துமீறி நுழைந்துள்ளனா்.

அப்போது, அங்கு இறை வணக்கக் கூட்டம் நடைபெற்ற நிலையில், அங்கிருந்த மாணவிகளை பயமுறுத்தும் வகையில் மோட்டாா் சைக்கிளில் சாகசத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

இது குறித்து அந்தப் பள்ளி நிா்வாகம் கொடுத்த புகாரின் பேரில், விருகம்பாக்கம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இது தொடா்பாக சரவணன், அஜித்குமாா் ஆகியோரை, போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments