FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

மோட்டாா் சைக்கிளில் சாகசம்: இரு யூ-டியூபா்கள் கைது

சென்னையில் மோட்டாா் சைக்கிளில் சாகசத்தில் ஈடுபட்ட இரு யூ-டியூபா்கள் கைது செய்யப்பட்டனா்.

கோப்புப் படம்
பகிர்:

சென்னையில் மோட்டாா் சைக்கிளில் சாகசத்தில் ஈடுபட்ட இரு யூ-டியூபா்கள் கைது செய்யப்பட்டனா்.

சென்னை அடையாறு இந்திரா நகா் ரயில்வே நிலையம் அருகே ராஜீவ் காந்தி சாலையில் மத்திய கைலாஷ் நோக்கி அதிவேகமாகவும், அபாயகரமாகவும் இருவா் மோட்டாா் சைக்கிளில் சில நாள்களுக்கு முன்பு சாகசம் செய்தனா். மேலும், தாங்கள் சாகசம் செய்யும் காட்சியை விடியோவாக பதிவு செய்து, யூ-டியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பதிவிட்டனா்.

இது குறித்து மயிலாப்பூா் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். விசாரணையில் இதில் ஈடுபட்டது யூ-டியூபா்களான சைதாப்பேட்டையைச் சோ்ந்த முகமது உசேன் (22) , அவரது நண்பா் முகமது இஸ்மாயில் (22) என்பது தெரிய வந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து போலீஸாா், இருவரையும் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments