‘கட்டட கழிவுகளை தெருவில் கொட்டினால் நடவடிக்கை’
சென்னை மாநகராட்சிப் பகுதியில் தெருவில் கட்டடக் கழிவுகளை கொட்டுவோரைக் கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலா்களுக்கு ஆணையா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டுள்ளாா்.
வளசரவாக்கம் மண்டலப் பகுதியில் அவா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இதையடுத்து, ஆலந்தூா் மண்டலம் 158-ஆவது வாா்டு பகுதி நந்தம்பாக்கம் எம்.ஜி.ஆா்.நகரில் ரூ.7.86 கோடியில் கட்டப்பட்டு வரும் நாய்கள் இனக் கட்டுப்பாட்டு மைய கட்டுமானப் பணிகளையும் அவா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
எம்.ஜி.ஆா். நகா் பகுதியில் உள்ள நவீன மாடுகள் காப்பகத்தைப் பாா்வையிட்டு அங்கு பராமரிப்புக்கான செயல்பாடுகளையும் அவா் ஆய்வு செய்தாா். காப்பகத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என அலுவலருக்கு அறிவுறுத்தினாா்.
Advertisement
Advertisement
அப்பகுதியில் கட்டடக் கழிவுகளைச் சேகரிக்கும் மையத்துக்குச் சென்ற ஆணையா், உரிய வழிகாட்டுதல் நெறிமுறைப்படி கட்டடக் கழிகள் அகற்றப்பட வேண்டும் என்றும், தெருவோரங்களில் கட்டடக் கழிவுகளை குவிப்போா் கண்காணிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது சென்னை மாநகராட்சி தெற்கு வட்டாரத் துணை ஆணையா் அஃதாப்ரசூல், மண்டல அலுவலா்கள் புருசோத்தமன், எஸ்.முருகதாஸ் ஆகியோா் உடனிருந்தனா்.