முகப்பு
சென்னை

திருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்

திருப்பதி-புதுச்சேரி இடையேயான தினசரி ‘மெமு’ ரயில் ஜூன் 24, 27 ஆகிய இரு நாள்கள் விழுப்புரத்துடன் நிறுத்தப்படும்.

Updated On : 16 ஜூன் 2026, 2:54 am IST
மெமு ரயில் - கோப்புப்படம்
பகிர்:

திருப்பதி-புதுச்சேரி இடையேயான தினசரி ‘மெமு’ ரயில் ஜூன் 24, 27 ஆகிய இரு நாள்கள் விழுப்புரத்துடன் நிறுத்தப்படும்.

இது குறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தெற்கு ரயில்வே திருச்சி கோட்டத்தில் தண்டவாள பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால், வரும் ஜூன் 24, 27 ஆகிய இரு நாள்களிலும் திருப்பதியிலிருந்து அதிகாலை 4.10 மணிக்குப் புறப்படும் ‘மெமு’ ரயில் விழுப்புரத்துடனும் நிறுத்தப்படும். அதேபோல் அந்நாள்களில் தாம்பரத்திலிருந்து காலை 9.40 மணிக்கு விழுப்பும் செல்லும் ‘மெமு’ ரயில் முண்டியம்பாக்கம் வரையே இயக்கப்படும். மறுமாா்க்கமாக விழுப்புரத்திலிருந்து பிற்பகல் 1.30 மணிக்கு புறப்பட வேண்டிய ‘மெமு’ ரயில் பிற்பகல் 1.38 மணிக்கு முண்டியம்பாக்கத்திலிருந்து புறப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement