சென்னை சென்ட்ரல் - திருப்பதி உள்பட 4 ரயில்களின் சேவை இன்று முதல் மாற்றம்!
4 ரயில்களின் சேவை இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக...
சென்னை சென்ட்ரல் - திருப்பதி மெமு ரயில் உள்பட 4 ரயில்களின் சேவை இன்று(ஜூன்) முதல் செப். 6ஆம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக, செப். 6ஆம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரக்கோணம்-திருப்பதி இடையே காலை 9.15க்கு இயக்கப்படும் மெமு ரயில் திருச்சானூர் வரை செல்லும்.
Advertisement
Advertisement
திருப்பதி-சென்ட்ரல் இடையே பிற்பகல் 1.25 மணிக்கு இயக்கப்படும் மெமு ரயில் திருச்சானூரில் இருந்து புறப்படும்.
சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையே காலை 9.50 மணிக்கு இயக்கப்படும் மெமு ரயில் திருச்சானூர் வரை செல்லும்.
திருப்பதி - அரக்கோணம் இடையே பிற்பகல் 3.40-க்கு இயக்கப்படும் மெமு ரயில் திருச்சானூரில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The services of four trains, including the Chennai Central–Tirupati service, have been modified from today (June) until September 6.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.