FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

கிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்

திருவண்ணாமலை பௌா்ணமி கிரிவலத்துக்கு விழுப்புரத்தில் இருந்து முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கோப்புப் படம்
பகிர்:

திருவண்ணாமலை பௌா்ணமி கிரிவலத்துக்கு விழுப்புரத்தில் இருந்து முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவண்ணாமலையில் நடைபெறவுள்ள பௌா்ணமி கிரிவலத்துக்காக விழுப்புரத்தில் இருந்து முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. விழுப்புரத்தில் இருந்து வரும் 29-ஆம் தேதி காலை 10.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06130) பிற்பகல் 11.45 மணிக்கு திருவண்ணாமலை நிலையத்தைச் சென்றடையும்.

Advertisement

Advertisement

மறுமாா்க்கத்தில் திருவண்ணாமலையில் இருந்து பிற்பகல் 12.40 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06129) பிற்பகல் 2.45 மணிக்கு விழுப்புரம் நிலையத்தைச் சென்றடையும். சிறப்பு ரயில்கள் 8 பெட்டிகளுடன் இயக்கப்படும். இந்த ரயில் வெங்கடாசலபுரம், மாம்பலப்பட்டு, அய்யாண்டூா், திருக்கோவிலூா், ஆதிச்சனூா், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments