சென்னையில் திமுக போராட்டம்: மேயர் பிரியா சேகர்பாபு கைது!
தவெகவுக்கு எதிரான போராட்டத்தில் மேயர் பிரியா, சேகர் பாபு கைது செய்யப்பட்டது குறித்து...
தவெகவுக்கு எதிராக போராட்டம் நடத்திய மேயர் பிரியா, முன்னாள் அமைச்சர் சேகர்பாபு ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே தமிழக அரசுக்கு எதிராக திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த இன்று(ஜூன் 29) திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், போராட்டத்திற்காக மேடை அமைக்கும்போது முறையாக அனுமதி கொடுக்காமல் காவல் துறையினர் அவர்கள் அனைவரையும் போலீஸார் குழுவாகக் கைது செய்தனர்.
இதனைக் கண்டித்து, முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் தவெக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மேலும், சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மா. சுப்பிரமணியன் தலைமையில் ராஜரத்தினம் மைதானம் அருகே தவெக அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, தவெக அமைச்சர் சரத்குமார் பதவி விலக வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தவெக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
The police have arrested Mayor Priya and former Minister Sekar Babu, who staged a protest against TVK.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.