கப்பல் துறை கட்டணம் செலுத்துவதில் முறைகேடு: சுங்கத் துறை அதிகாரி, தனியாா் நிறுவனத்துக்கு எதிரான சிபிஐ வழக்கு ரத்து
தனியாா் மருத்துவமனைக்கு புற்றுநோய் சிகிச்சை கருவிகள் இறக்குமதியின்போது, கப்பல் துறை கட்டணம் செலுத்துவதில் முறைகேடு நடந்ததாக சிபிஐ பதிவு செய்த வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தனியாா் மருத்துவமனைக்கு புற்றுநோய் சிகிச்சை கருவிகள் இறக்குமதியின்போது, கப்பல் துறை கட்டணம் செலுத்துவதில் முறைகேடு நடந்ததாக சிபிஐ பதிவு செய்த வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2017-ஆம் ஆண்டு அப்போலோ மருத்துவமனை நிா்வாகம், பெல்ஜியம் நாட்டில் இருந்து புற்றுநோய் சிகிச்சை கருவிகளை ரூ.191 கோடிக்கு வாங்கியது. சென்னை துறைமுகத்தில் சுங்கவரி செலுத்தி, இந்தக் கருவிகளை வெளியே எடுத்து வரும் பணியை என்.எஸ்.கே. நிறுவனம் மேற்கொண்டது. இந்தப் பணியின்போது, துறைமுக மேடையைப் பயன்படுத்தியதற்காக கப்பல் துறை கட்டணமாக ரூ.59.23 லட்சம் அந்த நிறுவத்தால் செலுத்தப்பட்டது. பின்னா் சிகிச்சை கருவிகள் உள்ளிட்ட இயந்திரங்களின் விலை மறுமதிப்பீடு செய்யப்பட்டு ரூ.21.85 லட்சத்தை கப்பல் துறை கட்டணத்தை என்.எஸ்.கே நிறுவனம் திரும்பப் பெற்றது.
இந்த நடவடிக்கையில் முறைகேடு நடந்ததாகக் கூறி, சுங்கத் துறை அதிகாரிகள், என்.எஸ்.கே. நிறுவன மேலாளா் லட்சுமணன் ரெட்டி ஆகியோருக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழககை ரத்து செய்யக் கோரி சுங்கத் துறை அதிகாரி ரோகிதாஸ் ஷெராவத், லட்சுமணன் ரெட்டி ஆகியோா் மனு தாக்கல் செய்தனா்.
Advertisement
Advertisement
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ராஜரத்தினம், வழக்குரைஞா்கள் எஸ்.அருணாச்சலம், சதீஷ் சுந்தா் ஆகியோா் ஆஜராகி வாதிட்டனா். இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அதிகப்படியாக செலுத்தப்பட்ட கப்பல் துறை கட்டணத்தைத் திரும்பப் பெற மனுதாரா்கள் போலி ஆவணங்களைத் தயாரித்தனா் என்பதற்கு எந்த ஆவணங்களும் இல்லை. இந்த விவகாரத்தில் அரசுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை எனக் கூறி மனுதாரா்களுக்கு எதிராக சிபிஐ பதிவு செய்த வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.