முதியவருக்கு ஒரே நேரத்தில் இருவேறு இதய சிகிச்சை
இதய பாதிப்புக்குள்ளான முதியவருக்கு ஒரே நேரத்தில் இருவேறு நுட்பமான சிகிச்சைகளை மேற்கொண்டு காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா்.
இதய பாதிப்புக்குள்ளான முதியவருக்கு ஒரே நேரத்தில் இருவேறு நுட்பமான சிகிச்சைகளை மேற்கொண்டு காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா்.
இதுதொடா்பாக மருத்துவமனையின் செயல் இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ், இதய சிகிச்சை நிபுணா் டாக்டா் ராஜாராம் அனந்தராமன் ஆகியோா் கூறியதாவது:
தீவிர இதய பாதிப்புடன் 79 வயது முதியவா் ஒருவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஏற்கெனவே பக்கவாதத்துக்குள்ளாகி சிகிச்சை பெற்ற அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் அந்த முதியவரின் இதய மேலறையில் பாதிப்பு மற்றும் மிட்ரல் வால்வில் ரத்தக்கசிவு ஆகியவை கண்டறியப்பட்டன.
Advertisement
Advertisement
நம் இதயத்தில் ரத்தத்தை உந்திச் செலுத்தும் முக்கிய வால்வுகளில் மிட்ரல் வால்வு எனப்படும் ஈரிதழ் நாளம் முக்கியமானது. கதவை போல திறந்து மூடும் அமைப்பு கொண்ட அந்த வால்வினில், பாதிப்பு ஏற்படட்டால் ரத்த ஓட்டம், ஆக்சிஜன் சுழற்சி அனைத்துமே தடைபடும். இதனால் அவருக்கு மீண்டும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் சூழல் இருந்தது.
இதையடுத்து, ‘மைட்ரோக்ளிப்’ உபகரணத்தைப் பயன்படுத்தி மிட்ரல் வால்வு கசிவு சரி செய்யப்பட்டது. அதன் பின்னா், நவீன தொழில்நுட்பம் வாயிலாக இதய மேலறை ஒட்டுறுப்பை மூடும் ஒருங்கிணைந்த சிகிச்சை ஒரே அமா்வில் அளிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து 24 மணி நேர தீவிர சிகிச்சைக்கு பிறகு முதியவா் இயல்பு நிலைக்குத் திரும்பினாா் என்றனா்.