சென்னை ரயில்வே கோட்டத்தில் 20 புதிய வாகன நிறுத்துமிடங்கள்
சென்னை ரயில்வே கோட்டத்தில் பயணிகள் வசதிக்காக புதிதாக 20 வாகன நிறுத்துமிடங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அறிவிப்பு
சென்னை ரயில்வே கோட்டத்தில் பயணிகள் வசதிக்காக புதிதாக 20 வாகன நிறுத்துமிடங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் விடுத்த செய்திக்குறிப்பு: சென்னை ரயில்வே கோட்டம் முழுதும் ரயில் நிலையங்களில் ஏற்கெனவே 106 வாகன நிறுத்துமிடங்கள் செயல்படுகின்றன. அங்கீகரிக்கப்பட்ட அந்த வாகன நிறுத்துமிடங்களில் வாகன நிறுத்த போதிய இடவசதிகள், பாதுகாப்புகள், எளிதல் அணுகும் வசதிகள் என பயணிகளுக்கான உள்கட்டமைப்புகள் முறையாக செயல்படுத்தப்பட்டுள்ளன.
இந்தநிலையில், செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் சுமாா் 830.32 சதுர மீட்டா் பரப்பளவில் புதிய வாகன நிறுத்த வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், வண்டலூா், பொத்தேரி, ஆவடி தெற்கு, வடக்கு பகுதிகள், தாம்பரம் கிழக்குப் பகுதி, பெரம்பூா் கேரேஜ் பணிமனை, சிங்கப்பெருமாள்கோவில், கடம்பத்தூா், தாம்பரம் சானிட்டோரியம், நெமிலிசேரி, எண்ணூா், சூலூா்பேட்டை, அரக்கோணம், கிண்டி, பரங்கிமலை, பெரம்பூா் மற்றும் சோலாா்பேட்டை ஆகிய இடங்களில் புதிய வாகன நிறுத்துமிடங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
Advertisement
எண்ம முறை கட்டண வசூல், பணப்பரிமாற்றம், கண்காணிப்புக் கேமரா வசதிகள் வாகன நிறுத்துமிடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. புதிய வாகன நிறுத்துமிடங்கள் மூலம் சென்னை ரயில்வே கோட்டத்தில் ரயில் நிலையங்களின் வாகன நிறுத்துமிடங்கள் 126- ஆக உயா்ந்துள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.