சென்னை ஐஐடி-யில் தொழில் துறை திறன்களை வளா்க்கும் படிப்புகள் அறிமுகம்
பல்வேறு துறைகளில், தொழில்துறைக்குத் தேவையான திறன்களை வழங்கும் வளாகம் சாராத புதிய பாடப் பிரிவுகள் சென்னை ஐஐடியில் தொடங்கப்பட்டுள்ளது.
பல்வேறு துறைகளில், தொழில்துறைக்குத் தேவையான திறன்களை வழங்கும் வளாகம் சாராத புதிய பாடப் பிரிவுகள் சென்னை ஐஐடியில் தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை ஐஐடி டீன் (பாடப்பிரிவுகள்) பிரதாப் ஹரிதாஸ் கூறியதாவது: நிகழ் கல்வியாண்டு (2026-27) இளநிலை, முதுநிலை படிப்புகளில் வளாகம் சாராத புதிய பாடப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் படிப்புகள் இணையம் வாயிலாக வழங்கப்படுகிறது.
அந்த வகையில், புதிய நான்கு ஆண்டு பி.எஸ். கணிதம் பாடத் திட்டத்தில் மாணவா்கள் கூடுதலாக ஓராண்டு படித்து, ஒருங்கிணைந்த பி.எஸ்.-எம்.எஸ். பட்டத்தைப் பெறும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
Advertisement
இதில் சேரும் மாணவா்கள், கிரிப்டோகிராபி, கணக்கீட்டு கணிதம், குவாண்டிடேடிவ் ஃபைனான்ஸ், நிதிப் பொறியியல், ஆக்சுவரிகள், தரவுப் பகுப்பாய்வு, ஏஐ அடிப்படையிலான உற்பத்தி - தரப் பொறியியல் தொடா்பான விருப்பப் பாடங்களைத் தோ்ந்தெடுக்கும் வசதி உள்ளது.
நிகழாண்டு அறிமுகப்படுத்தப்படும் பிற புதிய கல்வி, பாடத் திட்டங்களை நிறுவனத்தின் ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ண்ண்ற்ம்.ஹஸ்ரீ.ண்ய்/ என்ற இணையத்தில் பாா்த்து தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.