பெருங்கோழியில் உழவர் பெருவிழா
உத்தரமேரூர் தாலுக்கா வேளாண்மைத் துறை சார்பில் உழவர் பெருவிழா மற்றும் விழிப்புணர்வு முகாம் பெருங்கோழி கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
உத்தரமேரூர் தாலுக்கா வேளாண்மைத் துறை சார்பில் உழவர் பெருவிழா மற்றும் விழிப்புணர்வு முகாம் பெருங்கோழி கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
வேளாண்மை உதவி இயக்குனர் ஆர்.கிருஷ்ணவேணி தலைமை வகித்தார். ஒன்றியக்குழு தலைவர் ஆர்.கமலக்கண்ணன் முன்னிலை வகித்தார். இதில், தோட்டக்கலைத் துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் விதைச்சான்று
துறை, வேளாண் விற்பனைத் துறை மூலம் செயல்படுத்தபடும் திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறப்பட்டது.
Advertisement
Advertisement
மேலும், பராம்பரிய வேளாண் விளைபொருட்களான இளநீர், பருத்தி, சீயக்காய், கேழ்வரகு போன்றவற்றின் பயன்பாடுகள் குறித்து தெரிவிக்கப்பட்டது. பண்ணைக் குட்டைகள் அமைத்தல், சூரிய சக்தி மூலம் இயங்கும் மின்மோட்டார்கள் வாங்குவதற்கு வேளாண்மை உதவி இயக்குனரிடம் முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
நீர்வள நிலவளத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்குக் கைத்தெளிப்பான் கருவிகளை ஒன்றியக்குழு தலைவர் வழங்கினார். இதில் 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். ஊராட்சி மன்றத் தலைவர் வள்ளி முருகன் நன்றி கூறினார்.