முகப்பு
காஞ்சிபுரம்

தூய்மை இந்தியா திட்டம்: சாலையை தூய்மைப்படுத்திய தமிழிசை செளந்தரராஜன்

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், கரசங்கால் பகுதியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் புதன்கிழமை குப்பைகளை அகற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை 

Updated On : 19 ஏப்ரல் 2018, 4:19 am IST
கரசங்கால் பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன்.
பகிர்:

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், கரசங்கால் பகுதியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் புதன்கிழமை குப்பைகளை அகற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். 
கடந்த 2014-ஆம் ஆண்டு, மகாத்மா காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2-ஆம் தேதி பிரதமர் நரேந்திரமோடி தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்தார். 
இதையடுத்து, இத்திட்டத்தின் மூலம் பொது இடங்கûளை தூய்மைப்படுத்தும் பணி நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
இந்நிலையில், குன்றத்தூர் ஒன்றியம், கரசங்கால் பகுதியில் புதன்கிழமை நடைபெற்று வந்த தூய்மை இந்தியா திட்டப் பணியில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கலந்து கொண்டு, சாலையில் கிடந்த குப்பைகளை அகற்றி எடுத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். 
இதையடுத்து, அதே பகுதியில் உள்ள அரசு நாற்றங்கால் பண்ணையையும், திடக்கழிவு மேலாண்மைத் திட்டப் பணிகளையும் பார்வையிட்டார். 
இதில் ஊரக வளர்ச்சி முகமை உதவித் திட்ட அலுவலர்கள் அடைக்கலமேரி, முரளி, செந்தில்நாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரபாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.