முகப்பு
காஞ்சிபுரம்

100 நாள் வேலை கோரி காத்திருக்கும் போராட்டம்

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் வேலை கோரி, ஸ்ரீபெரும்புதூர் வட்டக்குழு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், ஜனநாய மாதர் சங்கம் மற்றும் மலைவாழ் மக்கள்

Updated On : 19 ஏப்ரல் 2018, 4:17 am IST
பகிர்:

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் வேலை கோரி, ஸ்ரீபெரும்புதூர் வட்டக்குழு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், ஜனநாய மாதர் சங்கம் மற்றும் மலைவாழ் மக்கள் சங்கத்தினர் புதன்கிழமை காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
ஸ்ரீபெரும்புதூர் வட்டக்குழு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம், மலைவாழ் மக்கள் சங்கம் ஆகியவற்றைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் புதன்கிழமை பேரணியாக வந்து படப்பை பகுதியில் உள்ள குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு கொடுத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணி அட்டை வைத்துள்ள அனைவருக்கும் 100 நாள்கள் முழுமையாக வேலை வழங்க வேண்டும், வேலைக்கான சட்டக் கூலி ரூ. 224-ஐ சரியாக வழங்க வேண்டும், ஏற்கெனவே செய்த பணிக்கான ஊதியத்தை உடனடியாக வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினர். 
இதையடுத்து தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தங்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து, நூற்றுக்கும் மேற்பட்டோர் மனு வழங்கினர். மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தில் உள்ள குளறுபடிகளை நீக்க வலியுறுத்தியும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு வழங்கப்பட்டது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.