முகப்பு
காஞ்சிபுரம்

இந்தியன் வங்கி: சங்கர மடம் கிளைக்கு புதிய கட்டடம் திறப்பு

இந்தியன் வங்கி சங்கர மடம் கிளையின் புதிய கட்டடத்தை காஞ்சிபுரம் ஆட்சியர் பா.பொன்னையா தொடங்கி வைத்தார்

Updated On : 24 ஜூலை 2018, 3:13 am IST
இந்தியன் வங்கி புதிய கிளையின் பயனாளிகளுக்கு காசோலை வழங்கும் ஆட்சியர்.
பகிர்:


இந்தியன் வங்கி சங்கர மடம் கிளையின் புதிய கட்டடத்தை காஞ்சிபுரம் ஆட்சியர் பா.பொன்னையா தொடங்கி வைத்தார்.
இந்தியன் வங்கியின் காஞ்சிபுரம் சங்கர மடம் கிளையின் இடத்தை மாற்றும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில் ஆட்சியர் பா.பொன்னையா கலந்துகொண்டு, இடமாற்றம் செய்யப்பட்ட காஞ்சிபுரம் சங்கர மடம் கிளையின் வங்கி அலுவலகத்தை திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து, சிறுதொழில் தொடங்குவதற்கான முத்ரா திட்டம் சார்பில் 2 பேருக்கு ரூ.6.50 லட்சம், வீட்டுக் கடனாக ஒருவருக்கு ரூ.66 லட்சம் என ரூ.72.50 லட்சம் மதிப்பிலான காசோலைகளை பயனாளிகளுக்கு வழங்கினார். 
இதுகுறித்து, இந்தியன் வங்கி மண்டல மேலாளர் விஜயலட்சுமி கூறுகையில், சங்கர மட வளாகத்தில் செயல்பட்டு வந்த இந்தியன் வங்கிக் கிளை போதிய இடவசதி இல்லை. இதற்காக, சங்கர மடம் அருகில் புதிய கிளை திறக்கப்பட்டுள்ளது. இதில், ஏடிஎம் இயந்திரம், வங்கி கணக்குப் புத்தக அச்சடிப்பு , டெபாசிட்டர் இயந்திரங்கள், லாக்கர் வசதிகள் என வாடிக்கையாளர் பணப் பரிவர்த்தனை செய்வதற்கேற்ப அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. 
மேலும், தொழில் கடன்கள், வீட்டுக்கடன்கள் உள்பட பல்வேறு கடன் வசதிகள், அடல் ஓய்வூதியத் திட்டம், பிரதமரின் ஜீவஜோதி காப்பீட்டுத் திட்டம், பிரதமரின் சுரக்ஷா பீமா காப்பீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வழக்கம் போல் செயல்படுத்தப்படும் என்றார் அவர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட முன்னோடி வங்கிகளின் மேலாளர் எப்சூர் ரகுமான், துணை மண்டல மேலாளர் ராஜகோபால், கிளையின் மேலாளர் ஏ.கருணாகரன், காஞ்சி சங்கர மட மேலாளர் சுந்தரேசன், இந்தியன் வங்கி அலுவலர்கள், பணியாளர்கள், அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments