பாதுகாப்புப் பணியில் 2,000 போலீஸார்
தீபாவளிப் பண்டிகையையொட்டி காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் சுமார் 2,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தீபாவளிப் பண்டிகையையொட்டி காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் சுமார் 2,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஊரப்பாக்கம் பகுதியில் வெளியூர்களுக்கு செல்வதற்கான தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் இந்தப் பண்டிகையை விபத்தில்லாமல், மகிழ்ச்சியுடனும், பாதுகாப்புடனும் கொண்டாடும் வகையில் காவல்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, சென்னை-பெங்களூரு, ஜிஎஸ்டி ஆகிய தேசிய நெடுஞ்சாலைகள், கிழக்கு கடற்கரைச் சாலை, பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் அனைத்து முக்கிய சாலைகளிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் சுமார் 2,000 போலீஸார் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், காஞ்சிபுரம் நகரில் தீபாவளிப் பண்டிகையையொட்டி, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான வழிபாட்டுத் தலங்கள், கடை வீதிகள், சுற்றுலாத் தலங்கள், பட்டாசுக் கடைகள், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்கள், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில், கண்காணிப்பு கேமரா, 8 உயர்கோபுரங்கள் அமைத்து போலீஸார் கண்காணித்து வருகின்றனர். எனவே, பொதுமக்கள் தங்களது பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்வதற்கு, மது அருந்தாமல், சாலை விதிகளை முறையாகப் பின்பற்றி தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.