முகப்பு
காஞ்சிபுரம்

விதிமுறை மீறல் பேனர்கள் அகற்றம்

காஞ்சிபுரம் பகுதிகளில் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்ட பேனர்களை போலீஸார் திங்கள்கிழமை அகற்றினர்.

Updated On : 26 பிப்ரவரி 2019, 4:09 am IST
பகிர்:


காஞ்சிபுரம் பகுதிகளில் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்ட பேனர்களை போலீஸார் திங்கள்கிழமை அகற்றினர்.
காஞ்சிபுரம் மாவட்டப் பகுதிகளில் விதிமுறைகளை மீறி பேனர்கள் வைக்கப்பட்டால் உரிமையாளர்கள் மீது குற்றவியில் நடவடிக்கை எடுக்கப்படும் என அண்மையில் ஆட்சியர் பா.பொன்னையா  அறிவித்திருந்தார். இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி பல்வேறு இடங்களில் அதிமுகவினர் பேனர்கள்  வைத்திருந்தனர். 
இதுகுறித்து, வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில், ஆட்சியர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து,  திங்கள்கிழமை காலை நகராட்சி அதிகாரிகள் ஆட்சியர் அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றினர். அப்போது, பாதுகாப்புப் பணியில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.