முகப்பு
காஞ்சிபுரம்

கார் மோதி மூதாட்டி சாவு

மதுராந்தகத்தை அடுத்த தபால்மேடு பகுதியில் சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி மீது கார் மோதியதில் அவர் இறந்தார்.

Updated On : 24 ஜனவரி 2019, 2:44 am IST
பகிர்:


மதுராந்தகத்தை அடுத்த தபால்மேடு பகுதியில் சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி மீது கார் மோதியதில் அவர் இறந்தார்.
தபால்மேடு கிராமத்தைச் சேர்ந்த நடராஜ் மனைவி தனபாக்கியம் (74). அவர் புதன்கிழமை தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து, தனது மகன் வீட்டுக்குச் சென்றார். அதன் பின் தன் வீட்டுக்கு வருவதற்காக சாலையைக் கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கிச் சென்ற ஒரு கார் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு, அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்து, இறந்தார். 
இந்த விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் வண்டியை நிறுத்தாமல், வேகமாகச் சென்று விட்டார். 
இது தொடர்பாக படாளம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் இந்த விபத்தை ஏற்படுத்திய காரை தொழுபேடு சுங்கச்சாவடியில் தடுத்து நிறுத்தினர். இதுபற்றி அவர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.