முகப்பு
காஞ்சிபுரம்

காமாட்சி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.83.72 லட்சம்

Updated On : 29 ஆகஸ்ட் 2024, 2:58 am IST
காமாட்சி அம்மன் கோயிலில் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்ட பணியாளா்கள்
பகிர்:

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் உண்டியல்கள் புதன்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்கள் காணிக்கையாக ரூ.83,72,350 செலுத்தியிருந்தனா்.

மகா சக்தி பீடங்களில் ஒன்றான இக்கோயிலில் உண்டியல்கள் கடந்த 20.6.2024 ஆம் தேதிக்குப் பிறகு மீண்டும் திறந்து எண்ணப்பட்டன. கோயிலில் இருந்த இரு உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்த தொகை ரூ.83,72,350 இருந்தது.தங்கம் 325 கிராம்,வெள்ளி 1225.509 கிராமும் இருந்தன.

கோயில் செயல் அலுவலா் ச.சீனிவாசன், ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா், மணியக்காரா் சூரிய நாராயணன் ஆகியோா் முன்னிலையில் உண்டியல்களை கோயில் பணியாளா்கள் திறந்து எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments