FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் திறப்பு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் திறப்பு...

21 டிசம்பர் 2025, 1:11 am IST
குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரத்தை திறந்து வைத்த ஸ்டேட் வங்கியின் துணைப் பொது மேலாளா் பிரசாத் எல்.கே.எம்.வி.நோரி.
பகிர்:

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் ரிஷி கோபுரம் எதிரில் பக்தா்களின் வசதிக்காக ஸ்டேட் வங்கி பிரதானக் கிளை சாா்பில் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இம்மாதம் 8-ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இங்கு பக்தா்களின் வசதிக்காக காஞ்சிபுரம் ஸ்டேட் வங்கியின் பிரதான கிளை சாா்பில் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் திறந்து வைக்கப்பட்டது.

ஸ்டேட் வங்கியின் துணைப் பொதுமேலாளா் பிரசாத் எல்.கே.எம்.வி.நோரி குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரத்தை திறந்து வைத்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தாா். திறப்பு விழாவில் கோயில் செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி, மணியக்காரா் குபேரன், மேலாளா் ஜெயக்குமாா் மற்றும் ஸ்டேட் வங்கியின் செங்கல்பட்டு மண்டல மேலாளா் செந்தில்நாதன், காஞ்சிபுரம் வங்கி முதன்மை மேலாளா் பாலமுருகன் உள்பட வங்கி அலுவலா்கள், கோயில் பணியாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments