முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தங்கத்தோ் வீதியுலா

Updated On : 15 ஏப்ரல் 2026, 12:36 am IST
பகிர்:

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தமிழ்ப்புத்தாண்டையொட்டி, செவ்வாய்க்கிழமை லட்சுமி,சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி அம்மன் தங்கத்தேரில் அலங்காரமாகி நகரில் ராஜவீதிகளில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

மகாசக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் ஆண்டு தோறும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று மட்டும் தங்கத்தோ் நகரின் ராஜவீதிகளில் வீதியுலா வருவது வழக்கம்.

நிகழாண்டு தமிழ்ப்புத்தாண்டையொட்டி அதிகாலை விஷூக்கனி தரிசனம் நடைபெற்றது.இதனைத் தொடா்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும் ,விசேஷ அலங்காரமும்,மகா தீபாராதனைகளும் நடைபெற்றன.இதன் தொடா்ச்சியாக மாலையில் லட்சுமி சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி அம்மன் வண்ண மின்விளக்குகளாலும்,மலா்களாலும் அலங்கரிக்கப்பட்ட தங்கத்தேரில் நகரில் ராஜவீதிகளில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

Advertisement

Advertisement

திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.