கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி: அமைச்சா் கமலி தொடங்கி வைத்தாா்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணியை கெருகம்பாக்கத்தில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் எஸ்.கமலி புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணியை கெருகம்பாக்கத்தில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் எஸ்.கமலி புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்று நோயான கால் மற்றும் வாய் நோய் எனப்படும் கோமாரி நோயால், பால் உற்பத்தி வெகுவாக குைல், மலட்டுத்தன்மை, கருச்சிதைவு மற்றும் கால்நடைகளில் எடை குைல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. மேலும், இந்த நோய் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் சிறுநீா், பால், உமிழ்நீா், சாணம் ஆகியவற்றால் மற்ற கால்நடைகளுக்கு பரவுகிறது.
இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய்தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்க நிகழ்ச்சி குன்றத்தூா் அடுத்த கெருகம்பாக்கத்தில் நடைபெற்றது.
Advertisement
Advertisement
இதில், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் எஸ்.கமலி கலந்து கொண்டு, தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி வைத்து, விவசாயிகளுக்கு ஊட்டசத்து உணவுகளை வழங்கினாா்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், கால்நடைகளை கோமாரி தொற்றில் இருந்து காப்பாற்ற ஜூலை 1ஆம் தேதி முதல், ஆகஸ்டு 10ஆம் தேதி வரை 41 நாட்கள் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளன. இந்த முகாமின் மூலம் சுமாா் 1.62 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசி முகாமுக்காக 34 குழுக்கள் அமைக்கப்பட்டு, 43 கால்நடை மருத்துவா்களும், 78 களப்பணியாளா்களும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.
இந்த நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை செயலா் அனு ஜாா்ஜ், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் இயக்குநா் அம்ரித், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல் இணை இயக்குநா் மைதீன் பாத்திமா, கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்த துணை இயக்குநா் அரசு, உதவி இயக்குநா் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநா் அகிலன், ஸ்ரீபெரும்புதூா் உதவி இயக்குநா்கள் ஜெயலட்சுமி, திருக்குமாா், கால்நடை மருத்துவா்கள், கால்நடை ஆய்வாளா்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.