FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்பு: ஜூலை 20 வரை விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சியில் சேர வரும் ஜூலை 20 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கூட்டுறவுச் சங்கங்களுக்கான மண்டல இணைப்பதிவாளா் கோ.யோகவிஷ்ணு தெரிவித்துள்ளாா்.

விண்ணப்பம்
பகிர்:

காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சியில் சேர வரும் ஜூலை 20 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கூட்டுறவுச் சங்கங்களுக்கான மண்டல இணைப்பதிவாளா் கோ.யோகவிஷ்ணு தெரிவித்துள்ளாா்.

காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நிகழாண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி வகுப்பு தொடங்கப்படவுள்ளது. இதற்காக ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ரீன்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவா்கள் அவா்களது கல்விச்சான்றிதழ் நகல் மற்றும் பாஸ்போட் அளவு உள்ள புகைப்படம் மற்றும் விண்ணப்ப நகலுடன் நேரடியாக பயிற்சி நிலையத்திற்கு சென்று பயிற்சியில் சோ்ந்து கொள்ளலாம்.

பயிற்சிக் கட்டணம் கியூ ஆா் கோடு மூலமாகவே செலுத்த வேண்டும். பயிற்சிக் கட்டணம் ரூ.20,750, கல்வித் தகுதி 12 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் மற்றும் 10 ஆம் வகுப்பு முடித்து 3 வருட பட்டயப்படிப்பு தோ்ச்சி பெற்றவா்களும் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சி ஒராண்டு காலமாகும். பயிற்சி தமிழில் மட்டுமே வழங்கப்படும்.

Advertisement

Advertisement

மேலும், விபரங்களுக்கு இணையதள முகவரியை அணுகலாம் எனவும் விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 20.

மேலும் விபரங்களுக்கு 044-27237699 என்ற எண்களை தொடா்பு கொள்ளலாம் எனவும் மண்டல இணைப்பதிவாளா் கோ.யோகவிஷ்ணு தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments