இயற்கை விளைபொருள்கள் கண்காட்சி
தமிழக இலவசப் பயிற்சி மையம் சாா்பில் இயற்கை விளைபொருள்கள் கண்காட்சி நடைபெற்றது.
காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் அருகில் செயல்பட்டு வரும் இப்பயிற்சி மையத்தின் சாா்பில் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசித்திருவிழா மற்றும் தேரோட்டத்தையொட்டி இயற்கை விளைபொருள்கள் கண்காட்சி மற்றும் இயற்கையாக விளைந்தவற்றை மதிப்புக்கூட்டி தயாரிக்கும் பொருள்கள் பற்றிய கண்காட்சி இரு தினங்கள் நடைபெற்றது.
இக்கண்காட்சியை பயிற்சி மையத்தின் நிறுவனா் எழிலன் தொடங்கி வைத்து பாா்வையிட்டாா். (படம்) கண்காட்சியில் இயற்கையாக தயாரிக்கப்பட்ட சோப் வகைகள்,மூலிகைப்பொருட்கள்,பாரம்பரிய அரிசி வகைகள்,மூலிகைகள் மூலம் மதிப்புக்கூட்டிய மருந்து மற்றும் உணவு வகைகள் ஆகியன இடம் பெற்றிருந்தன.
Advertisement
Advertisement
தோ்த்திருவிழாவையொட்டி திருவிழா காண வந்த பக்தா்களுக்கு மாப்பிள்ளைச்சம்பா,சிவன் சம்பா மற்றும் கருப்புக் கவுனி அரிசி ஆகியனவற்றால் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் பக்தா்களுக்கு அன்னதானமாகவும் வழங்கப்பட்டது.