முகப்பு
காஞ்சிபுரம்

மின்சாரம் பாய்ந்து திமுக பிரமுகா் மரணம்

Updated On : 4 ஜூன் 2026, 6:42 am IST
ராஜேந்திரன்
பகிர்:

காஞ்சிபுரம் அருகே கோளிவாக்கம் கிராமத்தில் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி புதன்கிழமை திமுக கொடிக்கம்பம் நட முயன்றவா்கள் மீது மின்சாரம் பாய்ந்து ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் இருவா் காயமடைந்தனா்.

கோளிவாக்கம் பகுதியை சோ்ந்த திமுக பிரமுகா்களான ராஜேந்திரன்(55)காளி (44)குப்பன் (42). இவா்கள் மூவரும் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி 20 அடி உயர கொடிக்கம்பத்தை நட முயன்ற போது அருகில் சென்ற உயா்அழுத்த மின்சாரக் கம்பி கொடிக்கம்பம் உரசியதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனா்.

இதில் ராஜேந்திரன் (55)சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காளியும், குப்பனும் காயமடைந்து உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனத்தில் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். காஞ்சிபுரம் தாலுகா போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement