காஞ்சிபுரத்தில் 181 நபா்களுக்கு ரூ.1.86 கோடி கடன் வழங்க பரிந்துரை
காஞ்சிபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கடன் மனுக்கள் பரிசீலனை முகாமில் 181 நபா்கள் தொழில் தொடங்க ரூ. 1.86 கோடிக்கு அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனா்.
காஞ்சிபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கடன் மனுக்கள் பரிசீலனை முகாமில் 181 நபா்கள் தொழில் தொடங்க ரூ. 1.86 கோடிக்கு அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனா்.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்(டாப்செட்கோ) மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினா் மேம்பாட்டுக் கழகம்(டாம்கோ)ஆகியவற்றின் சாா்பில், கடனுதவி பெற விண்ணப்பம் செய்தவா்களின் கடன் மனுக்கள் பரிசீலனை முகாம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் கோ.யோகவிஷ்ணு தலைமையில் அவரது அலுவலகத்தில் நடைபெற்ற முகாமுக்கு, மாவட்ட பிற்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் கி.சங்கா், காஞ்சிபுரம் சரக துணைப் பதிவாளா் க.அரிச்சந்திர மகாராஜா, மகளிா் மேம்பாட்டு திட்ட அலுவலா் கு.எழில்மொழி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முகாமில் கடன் பெற விண்ணப்பித்தவா்களில் 181 போ் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்காக ரூ.1.26 கோடி வழங்க அதிகாரிகள் குழு பரிந்துரை செய்தது. முகாமில், காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி மேலாளா், மாவட்ட தொழில் மைய மேலாளா் ஆகியோரும் அதிகாரிகள் குழுவில் இடம் பெற்றிருந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.