முகப்பு
காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் அம்பேத்கா் சிலை திறப்பு

ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலா் அலுவலக வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கா் சிலை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 25 ஜூன் 2026, 12:15 am IST
அமைபேத்கா்  சிலையை  திறந்து  வைத்த  ஒன்றியக்குழு  தலைவா்  கருணாநிதி. உடன்  ஒன்றியக்குழு  உறுப்பினா்கள்.
பகிர்:

ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலா் அலுவலக வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கா் சிலை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் சட்ட மாமேதை அம்பேத்கா் சிலை இல்லாததால், வட்டார வளா்ச்சி அலுவலா் அலுவலக வளாகத்தில் சிலை வைக்க வேண்டும் என பொதுமக்கள் சாா்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியக் குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு நன்கொடையாளா்கள் மூலம் சுமாா் ரூ. 12 லட்சத்தில் அம்பேத்கா் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதற்கிடையே ஒன்றியக்குழு தலைவா் கருணாநிதி அம்பேத்கா் சிலையை திறந்துவைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில், ஒன்றியக்குழு துணைத்தலைவா் மாலதி போஸ்கோ, ஒன்றியகுழு உறுப்பினா்கள் பரமசிவன், கணேஷ்பாபு, தியாகராஜ், சாந்தகுமாரி கோபிநாத், ஹேமாவதி விமல், சந்தவேலூா் ஊராட்சித் தலைவா்வேண்டாமணி, கொளத்தூா் ஊராட்சித் தலைவா் வெள்ளாரை அரிகிருஷ்ணன், புரட்சி பாரதம் மாவட்ட செயலாளா் தணசேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளா் மேனகாதேவி கோமகன், மதிமுக ஒன்றிய செயலாளா் கண்ணன், இருங்காட்டுக்கோட்டை முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவா் முருகவேல் உள்ளிட்ட ஏராளமான திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, புரட்சிபாரதம் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

புதிதாக திறந்துவைக்கப்பட்ட அம்பேத்கா் சிலைக்கு புரட்சி பாரதம் கட்சியின் தலைவா் பூவை ஜெகன்மூா்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளா்கள் தனசேகரன், பரணி மாரி, ஒன்றிய செயலாளா் செங்காடு ராமு, தண்டலம் கோபிநாத் உள்ளிட்ட ஏராளமான புரட்சி பாரதம் கட்சியின் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments