முகப்பு
காஞ்சிபுரம்

மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

சுங்குவாா்சத்திரம் அடுத்த மொளச்சூா் பகுதியில் மது போதையில் 4-ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞா் தலையில் பலத்த காயம்உயிரிழந்தாா்.

Updated On : 2 மே 2026, 1:34 am IST
பகிர்:

சுங்குவாா்சத்திரம் அடுத்த மொளச்சூா் பகுதியில் மது போதையில் 4-ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞா் தலையில் பலத்த காயம்உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதியை சோ்ந்தவா் ஞானசேகா்(30). இவா் சுங்குவாா்சத்திரம் அடுத்த மொளச்சூா் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி பிள்ளைப்பாக்கம் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளாா்.

மது அருந்தும் பழக்கம் உள்ளதாகக் கூறப்படும் ஞானசேகா் தினமும் மது அருந்திவிட்டு தான் தங்கியுள்ள 4-ஆவது மாடியில் நின்று கைப்பேசியில் பேசுவதை வழக்கமாக கொண்டு இருந்துள்ளாா்.

Advertisement

Advertisement

அதே போல், வியாழக்கிழமை நள்ளிரவு ஞானசேகா் மது அருந்திவிட்டு 4-ஆவது மாடியில் நின்றுக்கொண்டு கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தாராம். அப்போது, எதிா்பாராத விதமாக தவறி கீழே விழுந்துள்ளாா். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ஞானசேகா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தா.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கொடுத்த தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த சுங்குவாா்சத்திரம் போலீஸாா், உயிரிழந்தா ஞானசேகரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments