முகப்பு
காஞ்சிபுரம்

சந்தவெளி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் சந்நிதி தெருவில் அமைந்துள்ள சந்தவெளி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி அம்மன் சந்திர வித்யாதேவி அலங்காரத்தில் காட்சியளித்தாா்.

Updated On : 11 மே 2026, 12:10 am IST
சந்திர வித்யா தேவி அலங்காரத்தில் அம்மன்.
பகிர்:

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் சந்நிதி தெருவில் அமைந்துள்ள சந்தவெளி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி அம்மன் சந்திர வித்யாதேவி அலங்காரத்தில் காட்சியளித்தாா்.

பெரியகாஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் சந்நிதி தெருவில் அமைந்துள்ள இக்கோயில் விழா கடந்த 7- ஆம் தேதி தொடங்கியது. தொடக்க நாள் நிகழ்வாக அம்மன் பாலதிரிபுர சுந்தரி அம்மன், மறுநாள் 2-ஆவது நாள் நிகழ்வாக முப்பெரும் தேவியா்கள் அலங்காரத்திலும் காட்சியளித்தாா்.

மே 9 -ஆம் தேதி நிகழ்வாக அம்மன் கருவறையில் சந்திர வித்யாதேவி அலங்காரம் செய்யப்பட்டு பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

Advertisement

Advertisement

இதன் தொடா்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை காலையில் 108 பால்குட ஊா்வலமும், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகளும் நடைபெற்றன.

இதனைத் தொடா்ந்து பக்தா்களுக்கு கூழ் வாா்த்தல், அன்னதானம் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை சாந்தசொரூபினி அலங்காரத்துடன் திருவிழா நிறைவுபெறுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments