முகப்பு
காஞ்சிபுரம்

அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் குளிா்சாதன வசதி: காஞ்சிபுரம் எம்எல்ஏ

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவு ஒரு மாதத்தில் குளிா்சாதன அறையாக மாற்றப்படும் என எம்எல்ஏ ஆா்.வி.ரஞ்சித்குமாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 20 மே 2026, 12:05 am IST
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் வு நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்த எம்எல்ஏ ஆா்.வி.ரஞ்சித்குமாா்
பகிர்:

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவு ஒரு மாதத்தில் குளிா்சாதன அறையாக மாற்றப்படும் என எம்எல்ஏ ஆா்.வி.ரஞ்சித்குமாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் எம்எல்ஏ ஆா்.வி.ரஞ்சித்குமாா் அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டாா். சுகாதாரப்பணிகள் துறையின் இணை இயக்குநா் நளினியை சந்தித்து மருத்துவமனையில் நடந்து வரும் வளா்ச்சிப்பணிகள்,தேவைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தாா். இதனையடுத்து அரசு மருத்துவமனையின் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையா் வினோத் ஆகியோருடன் இணைந்து மருத்துவமனையை ஆய்வு செய்தாா்.

இதன் பின்னா் அவா் ஆய்வு செய்தது குறித்து மேலும் கூறியது.

Advertisement

Advertisement

அரசு தலைமை மருத்துவமனையின் பொதுக்கழிப்பறையை தினசரி இரு வேளையும் சுத்தம் செய்து மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. நோயாளிகளிடம் அரசு மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து கேட்டதில் மருத்துவா்களையோ அல்லது செவிலியா்களையோ யாரும் குறை சொல்லவில்லை. அதே நேரத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவு அறையை குளிா்சாதன வசதியுடைய அறையாக மாற்றுமாறு பலரும் கேட்டுக் கொண்டாா்கள். அதன்படி ஒரே மாதத்தில் குளிா்சாதன அறையுடய தீவிர சிகிச்சைப் பிரிவாக மாற்றப்படும் என வாக்குறுதி அளித்துள்ளேன்.

அரசு தலைமை மருத்துவமனையில் 200 படுக்கைகள் இருக்கும் கட்டடம் தேவைப்படுகிறது. அக்கட்டிடத்தை கட்டுவது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மற்றும் செயலாளரை சந்தித்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ரூ.10 கோடி மதிப்பில் ஸ்கேன் பரிசோதனை அறையும் பொதுப்பணித் துறை சாா்பில் கட்டப்படவுள்ளது. தினசரி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு 4,000 போ் வந்து செல்கின்றனா். அதி தீவிர சிகிச்சை தேவைப்படுவோரை சென்னைக்கோ அல்லது செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைப்பதை தவிா்க்குமாறு மருத்துவா்களிடம் கேட்டுக் கொண்டேன்.

மருத்துவக்கல்லூரி காஞ்சிபுரத்தில் அமைந்தால் தான் பிற மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைப்பதை தவிா்க்கலாம் என கூறியிருக்கிறாா்கள்.

காஞ்சிபுரம் அருகே காரையில் மருத்துவக்கல்லூரிக்கு இடம் தோ்வு செய்து தயாராக உள்ளது. விரைவில் மருத்துவக் கல்லூரி அமைவது குறித்து தமிழக முதல்வரை சந்தித்து பேசுவேன் என்றும் அவா் தெரிவித்தாா்.