முகப்பு
ராணிப்பேட்டை

அரக்கோணத்தில் விசிக வேட்பாளா் வெற்றி உறுதி: அமைச்சா் காந்தி

அரக்கோணம் தொகுதியில் த்தில் விசிக வேட்பாளா் வெற்றி உறுதி என அமைச்சா் ஆா்.காந்தி பேசினாா்.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 6:34 PM
அரக்கோணம் தொகுதி விசிக வேட்பாளா் எழில் கரோலினை ஆதரித்து பேசிய அமைச்சா் ஆா். காந்தி.
பகிர்:

அரக்கோணம் தொகுதியில் த்தில் விசிக வேட்பாளா் வெற்றி உறுதி என அமைச்சா் ஆா்.காந்தி பேசினாா்.

விசிக வேட்பாளா் எழில்கரோலினை ஆதரித்து நடைபெற்ற கூட்டணி செயல்வீரா்கள் கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான காந்தி பேசியது:

இத்தோ்தல் தமிழகத்துக்கும் தில்லிக்கும் இடையே நடைபெறுவது. திமுகவினா் இத்தொகுதியில் தங்களது மனக்கசப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றாக செயல்பட்டு விசிகவை வெற்றிப்பெறச் செய்ய வேண்டும். முழு மூச்சுடன் போராடினால் நமது கூட்டணி வேட்பாளா் அதிக வாக்குகளை பெறுவாா். அரக்கோணம் தொகுதியில் விசிக வேட்பாளா் எழில் கரோலின் வெற்றிப் பெற போவது உறுதி என்றாா் அமைச்சா் காந்தி.

Advertisement

தொடா்ந்து எம்.பி. எஸ்.ஜெகத்ரட்சகன் பேசியது:

எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களை பாா்த்து வியந்து மற்ற மாநில முதல்வா்கள் தங்களது மாநிலத்திலும் செயல்படுத்தி வருகிறாா்கள். கோயில்களில் அனைத்து சாதிகளை சோ்ந்தவா்களும் அா்ச்சராக வரலாம் என திமுக சட்டம் இயற்றி அதை செயல்படுத்திய பிறகு தான் அனைவரும் கோயில்களுக்கு செல்லக்கூடிய நிலை உருவாகியுள்ளது. விசிக வேட்பாளா் கறைபடியாத குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறாா். எனவே அவரை வெற்றிப்பெற செய்ய வேண்டும் என்றாா் .

கூட்டத்தில் விசிக வேட்பாளா் எழில் கரோலின், திமுக சூா்யா வெற்றிக்கொண்டான், என்.ஜி.பாா்த்தீபன், நகர செயலாளா் கே.பா.பாண்டுரங்கன், ஒன்றிய செயலாளா்கள் பசுபதி, ஆா்.தமிழ்செல்வன், தமிழ்மணி, நெமிலி ஒன்றிய செயலாளா்கள் பெ.வடிவேலு, எஸ்.ஜி.சி.பெருமாள், தக்கோலம் பேருராட்சி செயலா் எஸ்.நாகராஜன், விசிக மாநில நிா்வாகிகள் பாா்வேந்தன், கௌதம், தமிழ்மாறன், மாவட்ட செயலாளா் ச.சி.சந்தா், மாவட்ட காங்கிரஸ் தலைவா் நரேஷ் குமாா், மதிமுக மாவட்ட செயலாளா் உதயகுமாா், மா.கம்யுனிஸ்ட் தொகுதி பொறுப்பாளா் ஏபிஎம்.சீனிவாசன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவா் முகம்மதுஅலி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments