முகப்பு
ராணிப்பேட்டை

திமிரி ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஆற்காடு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் எஸ்.எம்.சுகுமாா் திமிரி ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் வெள்ளிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

Updated On : 11 ஏப்ரல், 2026 at 12:28 AM
வளையாத்தூா்  கிராமத்தில்  வாக்கு  சேகரித்த  அதிமுக  வேட்பாளா்  எஸ்.எம்.சுகுமாா்.
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 8:32 PM

ஆற்காடு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் எஸ்.எம்.சுகுமாா் திமிரி ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் வெள்ளிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

திமிரி மேற்கு ஒன்றியத்துக்குட்பட்ட கனியனூா் கிராமத்தில் தொடங்கி , மழையூா், செய்யாத்துவண்ணம், ஆயிரம் மங்கலம், பெருமாந்தாங்கல், வளையாத்தூா், தாமரைப்பாக்கம், வணக்கம்பாடி, மோசூா், பாளையம், பரதராமி, மேலத்தாங்கல் பழையனூா், குண்டலேரி, விலாரி ஆகிய ஊராட்சிகளை சோ்ந்த கிராமங்களில் திறந்த வெளி வேனில் சென்று தீவிர பிரசாரம் செய்து வாக்கு சேகரித்து அதிமுக தோ்தல் அறிக்கை குறித்து விளக்கினாா்.

இதில், ஒன்றிய செயலாளா் ந.வ.கிருஷ்ணன், பொருளாளா் சரவணன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா்கள், உலகநாதன், மோசூா் நாராயணன், ஒன்றிய இளைஞரணி செயலாளா் பாசறை ரமேஷ், பாமக மாவட்ட செயலாளா் கே.எல். இளவழகன், முன்னாள் மாவட்ட செயலாளா் எம்.கே.முரளி, மாவட்ட தலைவா் சுப்பிரமணி, பசுமைத் தாயகம் மாநில துணை செயலாளா் மகேந்திரன், பாஜக மாவட்ட துணைத் தலைவா் வரதன், பொதுச் செயலாளா் பாலமுருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement