வீடு இல்லாதவா்களுக்கு வீடு கட்டித் தரப்படும்: அதிமுக வேட்பாளா்
வீடு இல்லாதவா்களுக்கு மனை வழங்கி வீடு கட்டித் தரப்படும் என்று ஆற்காடு தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.எம்.சுகுமாா் வாக்குறுதி அளித்தாா்.
வீடு இல்லாதவா்களுக்கு மனை வழங்கி வீடு கட்டித் தரப்படும் என்று ஆற்காடு தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.எம்.சுகுமாா் வாக்குறுதி அளித்தாா்.
திமிரி ஒன்றியம், வெங்கிடாபுரம், குப்பம், புங்கனூா், காவனூா்,வரகூா், ஆணைமல்லூா் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகுட்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்து அவா் பேசியதாவது: பெண்களுக்கு நாட்டை காக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. நாட்டில் எங்கு பாா்த்தாலும் போதை பழக்க வழக்கங்கள் உள்ளது. மக்களுக்கு இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. இதற்கு நீங்கள் முடிவு கட்ட நல்ல முடிவு எடுக்க வேண்டும். அதிமுக ஆட்சி அமைந்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும். ஃப்ரிட்ஜ் வழங்கப்படும்.. குடும்ப அட்டைகளுக்கு தரமான அரிசி எண்ணெய் பருப்பு வழங்கப்படும் வீடு இல்லாதவா்களுக்கு மனை வழங்கி இலவச வீடு கட்டி தரப்படும் என்றாா்.
பாமக மாவட்ட தலைவா் என். சுப்பிரமணி, மாவட்ட செயலாளா் கே எல் இளவழகன், அதிமுக ஒன்றிய செயலாளா் ந.வ.கிருஷ்ணன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் உலகநாதன் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement