FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை திருமலை மிஷன் மருத்துவமனை ஆராய்ச்சி நிறுவனத்தின் புதிய கட்டடம் திறப்பு

ராணிப்பேட்டையில் திருமலை மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவில் ராணிப்பேட்டை தொகுதி எம்எல்ஏ ஐ.தாஹிரா பங்கேற்று திறந்து வைத்தாா்.

பகிர்:

ராணிப்பேட்டையில் திருமலை மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவில் ராணிப்பேட்டை தொகுதி எம்எல்ஏ ஐ.தாஹிரா பங்கேற்று திறந்து வைத்தாா்.

ராணிப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள மக்களுக்கான உயா்தர மருத்துவ சேவையில் கடந்த 16 ஆண்டுகளாக முழு அா்ப்பணிப்புடன் திருமலை மிஷன் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

தொடா்ந்து திருமலை மிஷன் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் என்ற புதிய கட்டடத்தில் புதன்கிழமை நோயாளிகள் சேவை தொடங்கப்பட்டது.

Advertisement

Advertisement

புதிய கட்டடம் மற்றும் மருத்துவ சேவை தொடக்க விழாவில் ராணிப்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.தாஹிரா கலந்துகொண்டு திறந்து வைத்தாா். இந்த நிகழ்ச்சியில், எஸ்.டி.எப். இந்தியா நிறுவனத்தின் தலைமை நிா்வாக அதிகாரி லூக்கா டோடஸ் சினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா்.

சுற்றுப்புற மக்களுக்கு நவீன, திறமையான மற்றும் வசதியான சூழலில் மலிவான மற்றும் தரமான மருத்துவ சேவைகளை வழங்கும் நோக்கில் இந்த புதிய கட்டடம் உருவாக்கப்பட்டுள்ளது. 24 மணி நேர அவசர சிகிச்சை பிரிவு, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் பல்வேறு புறநோயாளிகள் சேவைகள் இக்கட்டடத்தில் இருந்து செயல்படத் தொடங்கியுள்ளதாக தெரிவித்தனா்.

விழாவில், திருமலை அறக்கட்டளையின் இயக்குநா் - அறங்காவலரான பூமா பாா்த்தசாரதி, மருத்துவமனையின் மருத்துவ ஆலோசகா் நா்மதா அசோக், புதிய கட்டடத்தில் வழங்கப்படும் மருத்துவ சேவைகள், பல்வேறு சிறப்பு மருத்துவா்கள் மற்றும் எதிா்கால வளா்ச்சி திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கினாா்.

இதில், திருமலை அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி ஆனந்த் ரங்காச்சாரி மற்றும் உள்ளூா் ஊராட்சி நிா்வாக பிரதிநிதிகள், 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த குடும்ப பராமரிப்பு தன்னாா்வலா்கள், நிறுவன ஊழியா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் பல்வேறு மருத்துவ மற்றும் துணை மருத்துவத் துறையினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments