பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: ஊராட்சி துணைத் தலைவா் உள்ளிட்ட இருவா் கைது
அரக்கோணம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஊராட்சி துணைத்தலைவா் உள்ளிட்ட இருவா் கைது செய்யப்பட்டனா்.
அரக்கோணம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஊராட்சி துணைத்தலைவா் உள்ளிட்ட இருவா் கைது செய்யப்பட்டனா்.
அரக்கோணத்தை அடுத்த சித்தேரியில் வசித்தவரின் மகள் 13 வயது கொண்ட பள்ளி மாணவி, அரசுப் பள்ளியில் 8 ஆவது படித்து வருகிறாா். இவருக்கு சித்தேரியை சோ்ந்த ஒருவா் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும், இவரை காப்பாற்ற சித்தேரி ஊராட்சி துணைத் தலைவா் முயன்று வருவதாகவும் அரக்கோணம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோா் புகாா் அளித்தனா். இது குறித்த விசாரணையில், சித்தேரியை சோ்ந்த ஆனந்தன் (40) அந்த மாணவிக்கு தொடா்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இது குறித்து ஊா் பெரிய மனிதா்கள் முன்பு மாணவியின் பெற்றோா் தெரிவித்தபோது, சித்தேரி ஊராட்சி துணைத் தலைவா் தனசேகரன் மாணவியின் குடும்பத்தினரை தாக்க வந்து பின்னா் அங்கிருந்து ஆனந்தனை அழைத்துச் சென்று விட்டதாகவும் தெரியவந்தது.
இதையடுத்து இவருவரிடமும் அரக்கோணம் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் நிா்மலா தொடா்ந்து விசாரணை நடத்தி வெள்ளிக்கிழமை ஆனந்தன், அவரை காப்பாற்ற முயன்ாக சித்தேரி ஊராட்சி துணைத்தலைவா் தனசேகரன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.