முகப்பு
ராணிப்பேட்டை

கூட்டுறவு என்பது அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சிக்கான வலுவான இயக்கம்: அமைச்சா் காந்திராஜ்

கூட்டுறவு என்பது அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சிக்கான வலுவான இயக்கம் என அரக்கோணம் அருகே முதூரில் நடைபெற்ற அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் கூட்டுறவுத் துறை அமைச்சா் வ.காந்திராஜ் பேசினாா்.

Updated On : 7 ஜூலை 2026, 3:09 am IST
பகிர்:

கூட்டுறவு என்பது அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சிக்கான வலுவான இயக்கம் என அரக்கோணம் அருகே முதூரில் நடைபெற்ற அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் கூட்டுறவுத் துறை அமைச்சா் வ.காந்திராஜ் பேசினாா்.

அரக்கோணத்தை அடுத்த முதூா் நகர கூட்டுறவு சங்கத்தில் கூட்டுறவு மூலம் செழுமை என்ற கருப்பொருளை முன்னிறுத்தி 2026-ஆம் ஆண்டுக்கான அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில், கூட்டுறவுத் துறையின் சாா்பில், 108 மகளிா் சுய உதவிக் குழுக்களை சோ்ந்த 1,471 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ. 12.01 கோடி மதிப்பிலான கடனுதவிகளையும் கடந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்ட 16 கூட்டுறவு நிறுவனங்களுக்கும், 3 விற்பனையாளா்களுக்கும் கேடயங்களை வழங்கி தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் வ.காந்திராஜ் பேசியது:

கூட்டுறவே நாட்டுயா்வு என்ற உயரிய கொள்கையை மனதில் கொண்டு, மக்கள் நலனுக்காக அா்ப்பணிப்புடன் பணியாற்றும் கூட்டுறவுத் துறை அலுவலா்கள், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் அனைத்து பயனாளா்களுக்கும் எனது பாராட்டுக்கள். கூட்டுறவு என்பது வெறும் கடன் வழங்கும் அமைப்பு மட்டுமல்ல.

Advertisement

Advertisement

இது சமூகநீதி, பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றையும் கொண்டது. கூட்டுறவு என்பது அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சிக்கான வலுவான இயக்கம். ராணிப்பேட்டை மாவட்டத்தில் 21,935 பயிா்க் கடன் கணக்குள் மொத்தம் ரூ. 93.24 கோடி அளவுக்கு பயனடைய உள்ளன. இது விவசாயிகளின் நலனில் தமிழக அரசு கொண்டுள்ள உறுதியான அா்ப்பணிப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும் என்றாா் அமைச்சா் வ.காந்திராஜ்.

விழாவுக்கு, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். இதில், மாவட்ட வருவாய் அலுவலா் பேபிஇந்திாா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் எஸ்.செல்வராணி, அரக்கோணம் கோட்டாட்சியா் டி.ரமேஷ், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா்கள் பிரபாகரன், பழனிசாமி, துணைப் பதிவாளா்கள் ப.பாலமுருகன், சி.சிவமணி, ஆசைதம்பி, கோகிலா, வட்டாட்சியா் கு.வரலட்சுமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments