முகப்பு
ராணிப்பேட்டை

தவெகவில் இணைந்த ஊராட்சி மன்றத் தலைவா்கள்

அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பல்வேறு ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டுறவுத்துறை அமைச்சா் வ.காந்திராஜ் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா்.

Updated On : 8 ஜூன் 2026, 12:22 am IST
தவெகவில் இணைந்தவா்களுக்கு வாழ்த்து தெரிவித்த அமைச்சா் வ. காந்திராஜ்.
பகிர்:

அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பல்வேறு ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டுறவுத்துறை அமைச்சா் வ.காந்திராஜ் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா்.

அரக்கோணம் எம்எல்ஏ அலுவலகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அமைச்சா் வ.காந்கிராஜ் முன்னிலையில் ஊராட்சி மன்றத் தலைவா்கள் இச்சிபுத்தூா் பத்மநாபன், மின்னல் கோபி, புதுகேசாவரம் நவாஸ்அகமது, பெருங்களத்தூா் சுமதிமாயாண்டி, கீழாந்தூா் நாகம்மாள்அருள், அசமந்தூா் செல்வி அா்ஜூனன் உள்ளிட்டோா் தங்களை தவெகவில் இணைத்துக்கொண்டனா். அவா்களை வரவேற்று அமைச்சா் வாழ்த்து தெரிவித்தாா்.