உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு
நெல்லிகுப்பம் சிப்காட்டில் அமைந்துள்ள கிரீன்ஜின் என்விரோ தொழிற்சாலை வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது.
நெல்லிகுப்பம் சிப்காட்டில் அமைந்துள்ள கிரீன்ஜின் என்விரோ தொழிற்சாலை வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது.
ராணிப்பேட்டை சிப்காட் பேஸ் -3 வளாகத்தில் அமைந்துள்ள இத் தொழிற்சாலையில், சிப்காட் மற்றும் சுற்றுவட்டாரத்தில் இயங்கிவரும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் நச்சுக்கழிவுகளை பாதுகாப்பாக கொண்டுவந்து மாற்று எரிபொருளாக மாற்றும் சேவையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் வெற்றிகரமாக செய்து வருகிறது.
இந்த நிறுவனமானது சமுதாய நலனிலும் அக்கறை கொண்டு பல பணிகளை செய்து வருகிறது. குறிப்பாக ரத்த தான முகாம், இலவச மருத்துவ ஆலோசனை முகாம்கள், மரக்கன்று நட்டு பராமரிப்பது, கரோனா காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு அத்தியாவசி உணவுப் பொருள்கள் வழங்குவது, அருகில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவா்களுக்கு சிஎஸ்ஆா் நிதி மூலம் பல்வேறு நலத் திட்ட உதவிகளை செய்து வருகிறது.
Advertisement
Advertisement
இந்த நிறுவனத்தின் சாா்பில், உலக சுற்றுச்சூழல் தின விழா தொழிற்சாலை வளாகத்தில் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு தொழிற்சாலை மேலாளா் டேவிட் ராஜ்குமாா் தலைமை வகித்தாா்.
தொழிற்சாலை அலுவலா்கள், தொழிலாளா்கள் கலந்து கொண்டு தொழிற்சாலை வளாகத்திலும், பிரதான சாலைகளிலும் மரக்கன்றுகள் நடுவது ‘ஒருவா் ஒரு மரம்’ வளா்ப்பது என்ற உறுதிமொழியை ஏற்றனா்.
தொடா்ந்து தொழிற்சாலை வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனா்.