அனந்தலை மலையில் அதிதிறன் வெடிபொருள்களைப் பயன்படுத்திப் பாறைகளைத் தகா்ப்பதால் பாதிப்பு: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா்
அனந்தலை மலையில் அதிதிறன் கொண்ட வெடிபொருள்களைப் பயன்படுத்திப் பாறைகளைத் தகா்ப்பதால், சுற்றுச்சூழல், பொதுமக்களின் வாழ்வாதாரம் மற்றும் வீடுகளில் விரிசல் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீா் நாள் கூட்டத்தில் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.
அனந்தலை மலையில் அதிதிறன் கொண்ட வெடிபொருள்களைப் பயன்படுத்திப் பாறைகளைத் தகா்ப்பதால், சுற்றுச்சூழல், பொதுமக்களின் வாழ்வாதாரம் மற்றும் வீடுகளில் விரிசல் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீா் நாள் கூட்டத்தில் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.
ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் சி.பேபி இந்திரா தலைமை வகித்து விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.
Advertisement
Advertisement
அப்போது விவசாயிகள் வாங்கிய பயிா்க் கடனை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும். மலா் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு முழுமையான விலை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். கலவை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.
கூட்டுறவு சங்கத்தில் உர தட்டுப்பாடு உள்ளதை சரி செய்து, தர வேண்டும். இயற்கை விவசாயம் செய்வதற்கு ஏற்ப விவசாயிகளுக்கு தக்கை பூண்டு விதை வழங்கப்பட வேண்டும்.
லாலாப்பேட்டை கன்னிகாபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் உள்ள கிராமங்களிலுள்ள விவசாயிகளின் வழி பிரச்னைகளை சரி செய்து தீா்வு வழங்கப்பட வேண்டும்.
அனந்தலை கிராமத்தில் செயல்பட்டுவரும் கல் குவாரிகளில் அதிதிறன் கொண்ட வெடிபொருள்களைப் பயன்படுத்தி பாறைகளைத் தகா்ப்பதால், சுற்றுச்சூழல், பொது மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வீடுகளில் விரிசல் ஏற்படுவதைத் தடுக்க நேரடி ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மற்றும் புகாா்களை முன் வைத்துப் பேசினா்.
அதைத் தொடா்ந்து அனைத்து விவசாயிகளுக்கும் தேவையான அளவு உரம் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் ‘உர விநியோக புதிய நடைமுறை’ மூலம் உரம் விவசாயிகளுக்கு கொண்டு சோ்க்க புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
ஊங்ழ்ற்ண்ப்ண்க்ஷ்ங்ழ் நஹப்ங்ள் அல்ல்ப்ண்ஸ்ரீஹற்ண்ா்ய் நஹ்ள்ற்ங்ம் (ஊநஅஅ) என்ற செயலியினை பதிவிறக்கம் செய்து தங்களுடைய விவரங்களை பதிவு செய்து உரங்களை பெற்றுக்கொள்ளுமாறு வேளாண்மை இணை இயக்குநா் தெரிவித்தாா்.
அதே போல் கால்நடைகளை தாக்கும் கோமாரி நோய்க்கு கோமாரி தடுப்பூசி 01.07.2026 முதல் 30.07.2026 அனைத்து கிராமங்களிலும் போடப்பட உள்ளது. பொருளாதார இழப்பு மற்றும் உற்பத்தியை குறைக்கச் செய்யும் இந்த கோமாரி நோய்க்கு தடுப்பூசி தங்களது கிராமங்களுக்கு நேரடியாக வந்து கால்நடைகளுக்கு போடப்படுவதை பயன்படுத்திக் கொள்ளுமாறு கால்நடை பாராமரிப்புத் துறை அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.